ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதம் துவங்கியதைத் தொடர்ந்து அமீரக தலைவர்கள் குடியிருப்பாளர்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகம் ரமலானை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது என்று அபுதாபியின் மகுட இளவரசரும் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான மாண்புமிகு ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது பொறுமை, சிந்தனை மற்றும் இரக்கத்திற்கான நேரம், கடவுளின் கருணை மற்றும் தயவுக்காக நாம் பிரார்த்திப்போம்” என்று ட்வீட் செய்துள்ளார்.
அமீரகத்தில் இன்று ரமலான் மாதம் துவங்கி இஸ்லாமியர்கள் தங்களது முதல் நோன்பை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.