ADVERTISEMENT

நவம்பர் மாதத்தில் திறக்கப்படவுள்ள அல் தாவுன் ரவுண்டானா! புதிய வடிவமைப்பை வெளியிட்ட ஷார்ஜா!!

Published: 24 Sep 2026, 4:05 PM |
Updated: 24 Sep 2026, 4:06 PM |
Posted By: Menaka

ஷார்ஜாவில் உள்ள ‘அல் தவுன் ஸ்கொயர்’ (Al Taawun Square) ஒரு பெரிய மாற்றத்தைச் சந்திக்கவுள்ளது. அதாவது வரும் நவம்பர் 4-ஆம் தேதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், இந்த முக்கிய ரவுண்டானாவின் (roundabout) புதிய வடிவமைப்பை ஷார்ஜா எமிரேட்டின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியின் (SIBF) தொடக்க நாளன்று இது மீண்டும் திறக்கப்படவுள்ளது. நெரிசல் மிகுந்த நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர் பெற்ற இப்பகுதியில், இந்தத் திறப்பு விழா ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சதுக்கத்தின் அடியில் அமைக்கப்படும் 500 மீட்டர் நீளமுள்ள அல் தவுன் சுரங்கப்பாதைக்கான பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாக ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

பல ஆண்டுகளாக, அல் தாவுன் ரவுண்டானா வழியாகச் செல்லும் பயணிகள் காலை மற்றும் மாலை நேர நெரிசலின் போது நீண்ட தாமதங்களைச் சந்தித்து வருகின்றனர். நான்கு திசைகளிலிருந்தும் போக்குவரத்து அதிகரிக்கும் போது, ​​இப்பகுதியைக் கடந்து செல்ல குறைந்தது 20 நிமிடங்கள் ஆகலாம் என்று அப்பகுதிவாசிகள் முன்பு கூறியுள்ளனர்.

மூன்று வழித்தடங்களைக் கொண்ட சுரங்கப்பாதை

புதிய அல் தாவுன் சுரங்கப்பாதையானது ஒவ்வொரு திசையிலும் மூன்று வழித்தடங்களைக் (lanes) கொண்டிருக்கும். இது அல் தாவுன் ஸ்ட்ரீட்டை அல் நஹ்தா பாலம் மற்றும் துபாயுடன் இணைக்கும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும், நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒவ்வொரு திசையிலும் மணிக்கு சுமார் 4,200 வாகனங்களைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்ட, சிக்னல் வசதி கொண்ட புதிய சந்திப்பு ஒன்றும் இத்திட்டத்தில் அடங்கும்.

இந்தச் சுரங்கப்பாதை ரவுண்டானாவைச் சுற்றியுள்ள போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும் அதே வேளையில், ஷார்ஜாவின் முக்கிய நிகழ்வு நடைபெறும் இடமாகவும், புத்தகக் கண்காட்சி (SIBF) நடைபெறும் இடமாகவும் உள்ள எக்ஸ்போ சென்டர் ஷார்ஜாவிற்கு (Expo Centre Sharjah) நேரடி அணுகலையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SRTAவின் கூற்றுப்படி, ஷார்ஜா மற்றும் துபாய் இடையே ஒரு முக்கிய போக்குவரத்து இணைப்பாக அல் தாவுன் தெருவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான அல் தாவுன் சாலைத் திட்டம் பிப்ரவரி 2027-இல் நிறைவடையும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகளின் ஒரு பகுதியாக, அல் தவுன் ரவுண்டானாவில் இருந்த அடையாளச் சின்னம் தற்காலிகமாக அகற்றப்பட்டது. சுரங்கப்பாதை திட்டம் நிறைவடைந்ததும், அது மறுவடிவமைப்பு செய்யப்பட்டு அதன் அசல் இடத்திலேயே மீண்டும் அமைக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட சாலைக் கட்டமைப்பானது, இப்பகுதியை அல் நூர் சாலையுடன் (Al Noor Road) இணைக்கும் எதிர்காலப் போக்குவரத்து வழித்தடத்தின் ஒரு பகுதியாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஷார்ஜா முழுவதும் போக்குவரத்து இணைப்பை மேலும் மேம்படுத்தும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel