ADVERTISEMENT

UAE: ஷார்ஜா வரும் பயணிகளுக்கு PCR சோதனை விதிமுறைகளில் மாற்றம்..!!

Published: 13 Apr 2021, 1:04 PM |
Updated: 13 Apr 2021, 2:25 PM |
Posted By: admin

ஷார்ஜா அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட கொரோனா சோதனை விதிமுறைகளை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இனி ஷார்ஜாவிற்கு வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனாவிற்கான எதிர்மறை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. தற்பொழுது 72 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதே போல், பயணிகள் ஷார்ஜா விமான நிலையம் வந்திறங்கியவுடன் மற்றுமொரு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பதும் கவனிக்கத்தக்கது.  

 

ADVERTISEMENT