ADVERTISEMENT

துபாயில் குவியும் செல்வந்தர்களின் முதலீடு: 8 மாதங்களில் 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள 335 சொகுசு வீடுகள் விற்பனை!!

Published: 28 Sep 2026, 3:12 PM |
Updated: 28 Sep 2026, 3:17 PM |
Posted By: Menaka

துபாயின் அதி-சொகுசு சொத்துச் சந்தையானது தொடர்ந்து செல்வந்தர்களை ஈர்த்து வருகிறது. அதாவது நடப்பு ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் 10 மில்லியன் டாலர் (36.7 மில்லியன் திர்ஹம்) அல்லது அதற்கும் அதிகமான மதிப்புள்ள 335 வீடுகள் விற்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

‘fäm Properties’ நிறுவனம் துபாய் நிலத் துறையின் (Dubai Land Department) தரவுகளை ஆய்வு செய்ததில், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 11.7 பில்லியன் திர்ஹம் மதிப்புள்ள 206 சொகுசு வில்லாக்கள் மற்றும் 8.67 பில்லியன் திர்ஹம் மதிப்புள்ள 129 உயர்தர அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, பாம் ஜுமைரா தொடர்ந்து முதலீட்டாளர்களின் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. புதிய தரவுகளின் படி, 10 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள வில்லாக்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை எண்ணிக்கை மற்றும் மதிப்பு ஆகிய இரண்டிலும், முதல் மூன்று இடங்களுக்குள் இப்பகுதி இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இத்தீவில் பின்வரும் விற்பனைகள் பதிவாகியுள்ளன:

  • 35 சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள்: மொத்த மதிப்பு 2.18 பில்லியன் திர்ஹம் (சராசரியாக ஒவ்வொன்றும் 62.2 மில்லியன் திர்ஹம்)
  • 28 சொகுசு வில்லாக்கள்: மொத்த மதிப்பு 1.85 பில்லியன் திர்ஹம் (சராசரியாக ஒவ்வொன்றும் 66.2 மில்லியன் திர்ஹம்)

‘Bayut’ நிறுவனத்தின் சமீபத்திய சந்தை தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதி-சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வில்லாக்களுக்காக அதிகம் தேடப்பட்ட பகுதிகளில் ஒன்றாகவும் பாம் ஜுமைரா திகழ்ந்தது.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, புளூவாட்டர்ஸ் ஐலேண்ட், எமிரேட்ஸ் ஹில்ஸ், டிஸ்ட்ரிக்ட் ஒன், ஜுமேரா பே ஐலேண்ட் மற்றும் அல் பராரி ஆகியவை பிற முக்கிய சொகுசுப் பகுதிகளாகத் திகழ்கின்றன.

மேலும், இக்காலகட்டத்தில் ‘Hadaeq Sheikh Mohammed Bin Rashid’ பகுதி அதிக அளவிலான மற்றும் அதிக மதிப்புள்ள சொகுசு வில்லா விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இங்கு 2.77 பில்லியன் திர்ஹம் மதிப்புள்ள 48 விற்பனைப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இப்பகுதியில் வில்லாவின் சராசரி விலை 57.8 மில்லியன் திர்ஹம் ஆக இருந்தது.

இது குறித்து ‘fäm Properties’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஃபிராஸ் அல் மசாதி (Firas Al Msaddi) அவர்கள் பேசுகையில், துபாயின் ரியல் எஸ்டேட் சந்தையின் உயர்தரப் பிரிவில் தொடர்ந்து கணிசமான முதலீடுகள் வருவதாகவும், செல்வந்த முதலீட்டாளர்கள் துபாயின் குடியிருப்புத் துறையில் பெரிய அளவிலான முதலீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

முதல் எட்டு மாதங்களில் விற்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு, ஜுமைரா செகண்டில் உள்ள அமான் ரெசிடென்சஸில் அமைந்துள்ள 31,201 சதுர அடி பரப்பளவுள்ள, ஆறு படுக்கையறைகள் கொண்ட ஒரு யூனிட் ஆகும், இது 422 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு விற்கப்பட்டதாகத தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், மிகவும் விலையுயர்ந்த வில்லா, ஜுமைரா ஃபர்ஸ்டில் உள்ள லா மெரில் அமைந்துள்ள 44,903 சதுர அடி பரப்பளவுள்ள, ஏழு படுக்கையறைகள் கொண்ட ஒரு சொத்து ஆகும், இது 350 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel