ADVERTISEMENT

அரேபிய வளைகுடாப் பகுதியில் தீப்பிடித்த எண்ணெய் கப்பலிலிருந்து 22 ஆசியக் குழுவினரை மீட்ட அமீரக தேசியப் படை!!

Published: 11 Oct 2026, 11:49 AM |
Updated: 11 Oct 2026, 11:49 AM |
Posted By: Menaka

அரேபிய வளைகுடாப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, ஐக்கிய அரபு அமீரக தேசியப் பாதுகாப்புப் படை (UAE National Guard) மேற்கொண்ட விரைவான மீட்பு நடவடிக்கையின் மூலம் 22 ஆசியக் குழுவினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்த அனைவரும் மீட்கப்பட்ட நிலையில், அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாகக் குழுவினர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து தேசியப் படையின் கடலோரக் காவல் பிரிவு மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியதாகவும், கப்பலைக் கண்டறிந்து அவசர நிலையைச் சமாளிக்க உடனடியாகச் சிறப்புப் படைகள் களமிறக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புக் குழுவினர் கப்பலைச் சென்றடைந்து, அங்கிருந்த 22 குழுவினரையும் வெற்றிகரமாக மீட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளன. மேலும், அவர்கள் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னதாக முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், மீட்கப்பட்ட அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடல்சார் அவசரநிலைகளை எதிர்கொள்வதில் தங்கள் பணியாளர்களின் தயார்நிலை மற்றும் செயல்பாட்டுத் திறனை இந்த நடவடிக்கை வெளிப்படுத்தியதாகத் தேசியப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

சர்வதேசக் கடல் பகுதிகளில் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான சூழலை வலுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த மீட்பு நடவடிக்கை அமைந்திருந்தது என்றும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel