ADVERTISEMENT

துபாய்: பாலைவனத்தில் கண்ணைக் கவரும் பிறை வடிவிலான ஏரி..!! வைரலாகும் வீடியோ..!!

Published: 17 Apr 2021, 3:40 AM |
Updated: 17 Apr 2021, 5:28 AM |
Posted By: admin

துபாயில் பிறை வடிவிலான ஏரி ஒன்று தற்பொழுது நெட்டிசன்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வானில் தென்படும் நிலவைப் போலவே இந்த ஏரியானது துபாயின் பாலைவனத்திற்கு நடுவே மணல் திட்டுகள் சூழ காண்போரைக் கவரும் வண்ணம் காட்சியளிக்கின்றது.

துபாயில் வசிக்கும் முஸ்தஃபா என்ற புகைப்படக் கலைஞர் இந்த காட்சிகளை ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்துள்ளார்.

ADVERTISEMENT

தான் படம் பிடித்த காட்சிகளை இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ கிளிப்பாகப் பகிர்ந்த அவர், “துபாய் பாலைவனத்தின் நடுவில் இந்த நிலவு வடிவ ஏரியைக் கண்டேன். இது துபாயின் மற்றுமொரு மறைக்கப்பட்ட அழகிய இடம். இங்கு சூரியன் உதிக்கும் மற்றும் சூரியன் மறையும் காட்சிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது” என கூறியுள்ளார்.

ADVERTISEMENT