இந்த வார இறுதியில் துபாயின் குளோபல் வில்லேஜுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால், நீங்கள் நவம்பர் 6, வெள்ளிக்கிழமை அன்று டிக்கெட் வாங்குவது சிறந்த தேர்வாக இருக்கும். குளோபல் வில்லேஜ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, நவம்பர் 6 அன்று டிக்கெட் வாங்கும் பார்வையாளர்கள், அடுத்த நாளான நவம்பர் 7 அன்று, கட்டணமின்றி இரண்டாவது முறையாக வருகை தரலாம்.
இந்த இலவச நுழைவைப் பெற, பார்வையாளர்கள் தங்களின் நவம்பர் 6 ஆம் தேதி என்ட்ரி டிக்கெட்டை வைத்துக்கொண்டு, சனிக்கிழமை அன்று வரும்போது ‘கேட் ஆஃப் தி வேர்ல்ட்’ (Gate of the World) பகுதியில் உள்ள தகவல் மையத்தில் அதைக் காண்பிக்க வேண்டும்.
மேலும், இந்த இலவச நுழைவு நவம்பர் 7 அன்று மட்டுமே செல்லுபடியாகும் என்று குளோபல் வில்லேஜ் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சலுகை 3,100 இலவச நுழைவுச்சீட்டுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது, மேலும் இது முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல், துபாயின் புகழ்பெற்ற பன்முகக் கலாச்சார இலக்கு, நவம்பர் 6 முதல் 10 வரை ஐந்து நாட்களுக்கு கலாச்சார நிகழ்ச்சிகள், பண்டிகைக்கால ஷாப்பிங் மற்றும் குடும்ப நடவடிக்கைகளுடன் தீபாவளியைக் கொண்டாட உள்ளது.
குறிப்பாக, நவம்பர் 6 அன்று, பார்வையாளர்கள் ‘Baithak’ எனப்படும் பாரம்பரிய தெற்காசிய இசை ஒன்றுகூடலை கண்டு ரசிக்கலாம். அதைத் தொடர்ந்து, நவம்பர் 7 அன்று, ஊடாடும் விளையாட்டுகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்தக் கொண்டாட்டங்களில், நவம்பர் 8 அன்று இரவு 8 மணிக்கு, 600 ட்ரோன்களின் காட்சியுடன் ஒரு சிறப்பு தீபாவளி ஒளிக்காட்சியும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel