ADVERTISEMENT

அமீரகத்தில் 11.11 சேல்: 90% வரை தள்ளுபடி வழங்கும் அமேசான், noon தளங்கள்!!

Published: 6 Nov 2026, 5:01 PM |
Updated: 6 Nov 2026, 5:05 PM |
Posted By: Menaka

அமேசான் மற்றும் நூன் (noon) தங்களின் 11.11 விற்பனையைத் தொடங்கியுள்ளதால், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் பெரும் தள்ளுபடிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எலெக்ட்ரானிக் பொருட்கள், ஃபேஷன், அழகுசாதனப் பொருட்கள், வீட்டு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகியவற்றில் 90 சதவீதம் வரை சேமிப்பை இந்த தள்ளுபடி வழங்குகின்றன.

ADVERTISEMENT

இந்த விற்பனை நவம்பர் 5 அன்று தொடங்கியது. noon சலுகைகள் நவம்பர் 13 வரையிலும், அமேசானின் எட்டு நாள் சலுகை நவம்பர் 12 அன்றும் முடிவடையும். குறிப்பாக, இந்த இரண்டு சில்லறை விற்பனையாளர்களும் 15 நிமிடங்கள் முதல் அதே நாள் சேவை வரையிலான வேகமான டெலிவரி விருப்பங்களுடன், விரைவான டெலிவரிகளிலும் கவனம் செலுத்துகின்றனர்.

அமேசான் 11.11 விற்பனை: 30 வகைகளில் 70% வரை தள்ளுபடி

அமேசானின் விற்பனை நவம்பர் 5 அன்று ஐக்கிய அரபு அமீரக நேரப்படி நள்ளிரவு 12.01 மணிக்குத் தொடங்கியது. இதில் 30க்கும் மேற்பட்ட வகைகளில் 70 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

வாடிக்கையாளர்கள் பின்வரும் சலுகைகளைக் காணலாம்:

  • எலெக்ட்ரானிக் பொருட்கள்: ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள், லேப்டாப்கள் மற்றும் கேமிங் கன்சோல்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி.
  • அழகு, ஃபேஷன் மற்றும் வீட்டுப் பொருட்கள்: 60 சதவீதம் வரை தள்ளுபடிகள்.
  • உடற்பயிற்சி உபகரணங்கள்: துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சை முன்னிட்டு, 40 சதவீதம் வரை தள்ளுபடி.
  • மளிகைப் பொருட்கள்: காய்கறிகள், பழங்கள், இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் உறைந்த உணவுகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி.

மேலும், வாடிக்கையாளர்கள் அமேசான் நவ் (Amazon Now) மூலமாகவும் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்யலாம், இது சில நிமிடங்களில் டெலிவரி வழங்குகிறது.

ADVERTISEMENT

இந்தச் சேவை மூலம் பிரீமியம் தயாரிப்புகளுக்காக 150 திர்ஹாம்ஸ் அல்லது அதற்கு மேல் செலவழிக்கும் அழகு சாதனப் பொருட்கள் வாங்குபவர்களுக்கு, லெபனான் கலைஞர் யாஸ்மினா கெய்ரூஸ் வடிவமைத்த ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்புப் பெட்டி வழங்கப்படும். அதில் 20-க்கும் மேற்பட்ட சிறிய தயாரிப்புகள் மற்றும் மாதிரிகள் உள்ளன.

இது குறித்து அமேசான் மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா மற்றும் துருக்கியின் துணைத் தலைவர் ஸ்டெஃபனோ மார்டினெல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், மீண்டும் வரும் 11.11 விற்பனையானது ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவும் பரபரப்பான ஷாப்பிங் பருவங்களில் ஒன்றின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று கூறியுள்ளார்.

அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கான டெலிவரி சலுகைகள்

அதேசமயம், பிரைம் உறுப்பினர்கள், 25 திர்ஹாம்ஸ்க்கு மேற்பட்ட அமேசான் நவ் ஆர்டர்களுக்கு இலவச டெலிவரியையும், 100 திர்ஹாம்ஸ்க்கு மேற்பட்ட ஆர்டர்களுக்கு இரண்டு மணி நேர இலவச அவசர டெலிவரியையும் பெறலாம்.

அமீரகத்தில் அமேசான் பிரைம் உறுப்பினர் கட்டணம் மாதத்திற்கு 16 திர்ஹாம்ஸ் அல்லது ஆண்டுக்கு 140 திர்ஹாம்ஸ் ஆகும்.

noon 11.11 விற்பனை: 90% வரை தள்ளுபடி மற்றும் தினசரி ஃபிளாஷ் டீல்கள்

noon -ன் விற்பனை நவம்பர் 5 முதல் 13 வரை நடைபெறுகிறது. இதில் ஃபேஷன், தொழில்நுட்பம், வீடு, அழகு மற்றும் உணவு ஆகிய பிரிவுகளில் 90 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

இந்த தளம், noon one உறுப்பினர்களுக்காக, ஏற்கனவே உள்ள தள்ளுபடிகளுக்கு மேல் 75 திர்ஹாம்ஸ் வரை 10 சதவீத கேஷ்பேக் உட்பட கூடுதல் பலன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், விற்பனை நடைபெறும் காலம் முழுவதும், வாடிக்கையாளர்கள் 11 திர்ஹாம்ஸ், 111 திர்ஹாம்ஸ் மற்றும் 1,111 திர்ஹாம்ஸ் விலைகளில் தினசரி ஃபிளாஷ் டீல்களை எதிர்பார்க்கலாம்.

முக்கிய சலுகைகள்:

  • ஃபேஷன்: 50 முதல் 80 சதவீதம் வரையிலான தள்ளுபடிகள்.
  • மொபைல் போன்கள்: 50 சதவீதம் வரை தள்ளுபடி.
  • அணியக்கூடியவை: 60 சதவீதம் வரை தள்ளுபடி.
  • ஹெட்ஃபோன்கள்: 70 சதவீதம் வரை தள்ளுபடி.
  • தொலைக்காட்சிகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட டிவி வாங்குதல்களுடன் 499 திர்ஹாம்ஸ் மதிப்புள்ள ஒரு இலவச சவுண்ட்பார்.
  • வீட்டு அலங்காரம்: சுமார் 10,000 திர்ஹாம்ஸ் மதிப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வீட்டு மறுசீரமைப்பு தொகுப்புகளில் 3,000 திர்ஹாம்ஸ் வரை சேமிப்பு.

அதுமட்டுமில்லாமல், இந்த ஆண்டு, தங்கள் வீடுகளை அலங்கரிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக, நூன் ஒரு பிரத்யேக வீட்டு மறுசீரமைப்பு சலுகையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

வேகமான டெலிவரிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் சலுகைகள்

நூன் தனது டெலிவரி சேவைகள் மூலம் வேகமான ஷாப்பிங்கை ஊக்குவிக்கிறது:

  • நூன் மினிட்ஸ்: 15 நிமிடங்களுக்குள் டெலிவரி, 80 சதவீதம் வரை தள்ளுபடியுடன்.
  • சூப்பர்மால்: 90 நிமிடங்களுக்குள் டெலிவரி.
  • மளிகைப் பொருட்கள்: 1 திர்ஹாம் முதல் தொடங்கும் சலுகைகள்.
  • noon food: 10 திர்ஹாம்ஸ் முதல் தொடங்கும் சலுகைகள், அனைத்து பயனர்களுக்கும் 11 சதவீத கேஷ்பேக்குடன் சலுகை வழங்கப்படுகிறது.

இந்த விற்பனைக் காலத்தில் கூடுதல் சேமிப்பை வழங்குவதற்காக, இந்த இரண்டு சில்லறை விற்பனையாளர்களும் வங்கி கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel