குவைத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கானது வரும் ஏப்ரல் 22 ம் தேதி முடியவிருந்த நிலையில், இந்த பகுதி நேர ஊரடங்கை ரமலான் மாத இறுதி வரையிலும் நீட்டிப்பதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கானது இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் உள்ளன.
தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த முடிவு சரியான நேரத்தில் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் குவைத் அமைச்சரவை மேலும் கூறியுள்ளது.
ஊரடங்கு உத்தரவு ஆரம்பத்தில் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் முடிவடைய திட்டமிடப்பட்டு பின்னர் ஏப்ரல் 22 வரை நீட்டிக்கப்படுவதாக குவைத் அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்பொழுது மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.