ADVERTISEMENT

UAE: இந்தியாவிலிருந்து பயணிகள் அமீரகம் வர விதிக்கப்பட்ட தடை மேலும் 10 நாட்கள் நீட்டிப்பு..!!

Published: 29 Apr 2021, 5:00 PM |
Updated: 29 Apr 2021, 5:04 PM |
Posted By: admin

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் அமீரகத்திற்குள் நுழைய அமீரக அரசு விதித்திருந்த 10 நாட்கள் தடையானது வரும் மே மாதம் 04 ஆம் தேதியுடன் முடியவிருந்த நிலையில், இந்த தடையானது மீண்டும் 10 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து விமான நிறுவனங்கள் டிராவல் ஏஜென்சிகளுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் அமீரகத்திற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடை மே மாதம் 14 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த தகவலை அமீரக விமான நிறுவனமான எமிரேட்ஸ் நிறுவனமும் அதன் சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளதும் உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் அதிகளவில் பதிவாகியதை தொடர்ந்து அமீரக அரசு இந்தியாவிலிருந்து நேரடியாக அமீரகம் வரும் பயணிகளுக்கும் மேலும் கடந்த 14 நாட்களில் இந்தியாவில் தங்கியிருந்து ட்ரான்சிட் மூலமாக அமீரகம் வரும் பயணிகளுக்கும் பயண தடையை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ஏற்கனவே விதிக்கப்பட்ட 10 நாட்கள் தடையால் தங்களின் குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த உறவினர்கள் கலக்கமடைந்திருந்த நிலையில், இந்த தடை நீட்டிப்பு அவர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததை போன்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் விமான சேவை மற்றும் சரக்கு விமானப் போக்குவரத்து சேவையானது வழக்கம் போல் தொடர்ந்து இயங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதே போன்று ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள், டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் ஆகியோருக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.