ADVERTISEMENT

ஈத் அல் பித்ரை முன்னிட்டு 460 சிறைக் கைதிகளுக்கு விடுதலை அளித்த ஓமான் சுல்தான்..!!

Published: 11 May 2021, 11:04 AM |
Updated: 11 May 2021, 11:11 AM |
Posted By: admin

ஓமானில் வரவிருக்கும் ஈத் அல் பித்ர் நிகழ்வையொட்டி, ஓமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்கள் 400 க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளுக்கு சிறப்பு அரச மன்னிப்பு வழங்கியுள்ளதாக ஓமான் நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

161 வெளிநாட்டவர்கள் உட்பட 460 பேருக்கு ஈத் அல்-பித்ரை முன்னிட்டு விடுதலை வழங்கப்பட்டதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. இவர்கள் பல்வேறு குற்றங்களை புரிந்து சிறைக்கு சென்றவர்கள் என கூறப்பட்டுள்ளது.

ஓமானில் உள்ள பிறை பார்க்கும் கமிட்டியானது நாளை (புதன்கிழமை) பிறை பார்ப்பதைப் பொறுத்து ஈத் அல் பித்ர் மே 13 ம் தேதி அல்லது மே 14 ம் கொண்டாடப்படுமா என அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT