ADVERTISEMENT

துபாய்: தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே இங்கெல்லாம் செல்ல அனுமதி..!! பட்டியலை வெளியிட்ட அதிகாரிகள்..!!

Published: 17 May 2021, 4:56 PM |
Updated: 17 May 2021, 5:03 PM |
Posted By: admin

துபாயில் கொரோனாவை தொடர்ந்து பொது இடங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நுழைவு தடை தற்போது நீக்கப்பட்டு குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்படுவதாக துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்சக் குழு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும் நிகழ்வு அமைப்பாளர்கள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமே இந்த நிகழ்வுகள் மற்றும் இடங்களுக்கு செல்ல முடியும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்சக் குழு மே 17 திங்கள் அன்று வெளியிட்ட புதிய கோவிட் பாதுகாப்பு அறிவிப்புகளின்படி, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அல்லது இந்த மூன்று சான்றாரும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டிய நிகழ்வுகள் மற்றும் இடங்களின் முழு பட்டியல் இங்கே:

ADVERTISEMENT

நேரடி பொழுதுபோக்கு மற்றும் செயல்பாடுகள்…

நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகள் ரெஸ்டாரன்ட், கஃபேக்கள் மற்றும் வணிக வளாகங்களில் சோதனை அடிப்படையில் ஒரு மாத காலத்திற்கு நடத்தலாம் என்று அறிவித்துள்ளது. எனினும் இதில் பங்கேற்கும் கலைஞர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள்…

பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தால் பொது நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள், இரவு விருந்துகள் மற்றும் விருது வழங்கும் விழாக்கள் நடத்தப்படலாம்.

திருமணங்கள்…

திருமண நிகழ்ச்சிகளுக்காக மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தி இருப்பதால், பங்கேற்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்.

பார்கள்…

பார்களுக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்.

விளையாட்டு நிகழ்வுகள்…

விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்கும் அனைத்து பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றிருந்தால் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும்.

துபாயில் வசிக்கும் தகுதி வாய்ந்த குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டு துபாய் அரசு செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது துபாயில் ஃபைசர் பயோஎன்டெக் மற்றும் சினோபார்ம் எனும் இரண்டு கோவிட் -19 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டும் வருகிறது. மேலும் முன்பு வழங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற திட்டமிடப்பட்ட அனைவரும் தொடர்ந்து அதைப் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.