ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகாலம் காரணமாக வெயில் சுட்டெரித்த போதிலும் அமீரகத்தின் ஒரு சில பகுதிகளில் பலத்த மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. ஷார்ஜாவின் வாதி அல் ஹிலோ (wadi al hilo) மற்றும் ஃபுஜைராவில் பலத்த மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
#الامارات : الان هطول أمطار الخير على وادي مي جنوب الفجيرة #مركز_العاصفة
٢٤ مايو ٢٠٢١ pic.twitter.com/6Xz4w5Os3j— مركز العاصفة (@Storm_centre) May 24, 2021
மேலும், தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) நாட்டின் கிழக்கு மலைப் பகுதிகளில் மழை மற்றும் மணல் புயல் ஏற்படும் எனக்கூறி மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
#الامارات : الان هطول أمطار الخير على وادي مي جنوب الفجيرة #مركز_العاصفة
٢٤ مايو ٢٠٢١ pic.twitter.com/JHejeVehps— مركز العاصفة (@Storm_centre) May 24, 2021
கிளவுட் சீடிங் எனும் செயல்முறை மூலம் இந்த மழை பெய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த செயல்முறையானது முழுநேரமும் நாட்டின் வளிமண்டலத்தை கண்காணிக்கும் அதிநவீன ரேடார் நெட்வொர்க்கை நம்பியுள்ளன.
NCM இன் பிரத்யேக செயல்பாட்டு அறையில் உள்ள விமானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு இந்தத் தரவை பகுப்பாய்வு செய்து க்ளவுட் சீடிங் முறையை மேற்கொண்டு மழைப்பொழிவை உண்டாக்குகின்றனர்.
#الامارات : الان هطول أمطار الخير على وادي مي جنوب الفجيرة #مركز_العاصفة
٢٤ مايو ٢٠٢١ pic.twitter.com/dHg5tPIeNn— مركز العاصفة (@Storm_centre) May 24, 2021