ADVERTISEMENT

கொரோனாவிற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வை அறிவித்த கத்தார் அரசு..!!

Published: 28 May 2021, 1:24 AM |
Updated: 28 May 2021, 3:30 AM |
Posted By: admin

கத்தாரில் கொரோனாவிற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பல்வேறு கட்டங்களாக தளர்த்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், அதனடிப்படையில் ஓய்வு மற்றும் கல்வி மையங்கள் மற்றும் உணவகங்கள் வெள்ளிக்கிழமை முதல் குறிப்பிட்ட திறனில் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அமைச்சரவை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வீடுகளில் குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையில் ஒன்றாக கூடுவதற்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் மால்கள் 30 சதவீத திறனில் செயல்படலாம் என்றும், இருப்பினும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜிம்கள், நீச்சல் குளங்கள் மற்றும் சலூன் கடைகள் வரையறுக்கப்பட்ட திறனில் மீண்டும் திறக்கப்படலாம் என்றும் ஆனால் திருமணங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், உள்ளூர் மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் பொது சுகாதார அமைச்சகத்தின் அனுமதியுடன் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பார்வையாளர்களுடன் திறந்தவெளி இடங்களில் 30 சதவீத திறனில் நடைபெறலாம் என கூறப்பட்டுள்ளது.

கத்தார் அரசு இந்த மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நான்கு கட்டங்களாக படிப்படியாக தளர்த்தும் என்று கூறியிருந்தது.

ADVERTISEMENT

அதில், முதல் கட்டம் மே 28 துவங்கும் மற்றும் நான்காவது கட்டம் ஜூலை 30 தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.