ADVERTISEMENT

காலாவதியான ரெசிடென்ஸ் மற்றும் நுழைவு விசா வைத்திருப்பவர்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி..!! அபுதாபி ஒப்புதல்..!!

Published: 11 Jun 2021, 1:31 PM |
Updated: 11 Jun 2021, 1:36 PM |
Posted By: admin

அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு காலாவதியான ரெசிடென்ஸ் அல்லது நுழைவு விசா வைத்திருக்கும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த முடிவானது அவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்காகவும், தொற்றுநோயால் ஏற்படும் விதிவிலக்கான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இலவச கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கு, எந்தவொரு அடையாள ஆவணத்தையும் அது காலாவதியானாலும் கூட, நியமிக்கப்பட்ட தடுப்பூசி மையங்களில் பதிவு செய்ய பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT