ADVERTISEMENT

அமீரகத்தில் VPN பயன்படுத்துவது சட்ட விரோத செயலா..?? அதற்கான தண்டனை என்ன..??

Published: 14 Jun 2021, 11:53 AM |
Updated: 14 Jun 2021, 12:53 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடியோ மற்றும் வீடியோ கால்களைச் செய்ய நீங்கள் VPN பயன்படுத்துகிறீர்களா?? உங்களுக்கான பதிவு இதுதான்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் VPN எனப்படும் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (Virtual Private Networks) பயன்பாடு உலகளவில் பார்க்கும்போது அமீரகத்தில் மிகவும் உயர்ந்துள்ளதாக ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரக குடியிருப்பாளர்களில் பத்து நபர்களுக்கு நான்கு பேர் வீதம் VPN ஐ பதிவிறக்கம் செய்துள்ளதாக அந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் VPN பயன்பாடு சட்டபூர்வமானது என்றாலும், இது நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளால் அதன் உள் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படலாம். அதே சமயத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தடைசெய்யப்பட்ட காலிங் மற்றும் கேமிங் பயன்பாடுகளை அணுக அல்லது அதனை பதிவிறக்கும்போது அது சட்டவிரோதமானது. அவ்வாறு செய்பவர்களுக்கு 2 மில்லியன் திர்ஹம் வரை அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அட்லஸ் VPN தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களால் 14 மில்லியன் திர்ஹமிற்கும் அதிகமான மதிப்புள்ள 5.58 மில்லியன் VPN அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

“ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட வலைத்தளங்கள், காலிங் அப்ளிகேஷன், கேமிங் அப்ளிகேஷன் போன்றவற்றிற்கான அணுகலைப் பெற IP முகவரியை மறைத்து VPN பயன்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் குற்றத்திற்கு ஒப்பானது” என்று ஆஷிஷ் மேத்தா & அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரர் ஆஷிஷ் மேத்தா கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரக சைபர் சட்டத்தின் கீழ், ஒரு தவறான முகவரி (IP address) அல்லது மூன்றாம் தரப்பு முகவரி (third party address) அல்லது ஒரு குற்றத்தைச் செய்ய அல்லது அதன் கண்டுபிடிப்பைத் தடுக்க வேறு வழிகளைப் பயன்படுத்தி தவறான கணினி நெட்வொர்க் நெறிமுறை முகவரியைப் (fraudulent computer network protocol address) பயன்படுத்துபவருக்கு தற்காலிக சிறைத்தண்டனை மற்றும் 500,000 திர்ஹம் முதல் 2 மில்லியன் திர்ஹம் வரையிலான அபராதம் அல்லது இந்த இரண்டில் ஏதேனும் ஒரு தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.