ADVERTISEMENT

UAE: ஸ்மார்ட்போன்களுக்கு 50% மற்றும் பொருட்களுக்கு 70% வரை தள்ளுபடி வழங்கும் Big yellow sale..!!

Published: 19 Jun 2021, 7:26 AM |
Updated: 19 Jun 2021, 7:28 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் இ-காமர்ஸில் முக்கிய பங்கு வகிக்கும் noon.com, ‘big yellow sale’ எனும் விற்பனையை மூன்று நாட்களுக்கு நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த விற்பனையின் போது 70 சதவீதம் வரை பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி விற்பனையானது ஜூன் 20 முதல் ஜூன் 22 நள்ளிரவு வரை இயங்கும் என்றும் இந்த ஆன்லைன் ஷாப்பிங் போனஸில், வாடிக்கையாளர்கள் வீட்டு உபகரணங்கள், சமையலறைப் பொருட்கள், அழகுப் பொருட்கள், மின்சாதனங்கள் என பல வகைப் பொருட்களை தள்ளுபடி விலையில் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மெகா விற்பனையில் குழந்தைகளின் அத்தியாவசியப் பொருட்கள் 3 திர்ஹம் மற்றும் மடிக்கணினிகள் 699 திர்ஹம் என அனைத்துப் பொருட்களும் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகின்றது.

ADVERTISEMENT

உலகளாவிய பிராண்டுகளான Dior, Versace, Gucci, L’Oreal, Maybelline மற்றும் NYX  போன்றவற்றில் தள்ளுபடிகள் வழங்கப்படும்.

இந்த விற்பனையில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை மற்றும் பாதணிகளில் ஆயிரக்கணக்கான buy 1 get 1 தள்ளுபடிகளைப் பெறலாம். மேலும், வாடிக்கையாளர்கள் டிசைனர் சன்கிளாஸ்கள் மற்றும் கைக்கடிகாரங்களை 399 திர்ஹம் மற்றும் அதற்கும் குறைவான விலையில் வாங்கலாம். அத்துடன் கேஜெட்டுகள், கிஸ்மோஸ் மற்றும் கேமிங்கிற்கு 70 சதவீதம் தள்ளுபடி, பாதி விலை சலுகையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிவிகள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் உடற்பயிற்சி டிராக்கர்களில் அற்புதமான தள்ளுபடியைப் பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT