ஐக்கிய அரபு அமீரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு டோஸைப் பெற்றிருந்தால், நாட்டிற்கு வெளியே சிக்கியுள்ள அமீரக ரெசிடென்சி விசாக்களை வைத்திருப்பவர்கள் இந்தியாவில் இருந்து திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஷேக் மன்சூர் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையிலான துபாயில் நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மையின் உச்சக் குழு, இந்தியா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து உள்வரும் பயணிகளுக்கான துபாயின் புதிய பயண நெறிமுறைகள் ஜூன் 23 புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.
அந்த புதிய நெறிமுறைகளின் படி அமீரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் இரண்டு டோஸினைப் பெற்றவர்களுக்கே அனுமதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள்
COVID-19 நோய்த்தொற்றுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில் நான்கு தடுப்பூசிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகாரம் அளித்துள்ளது.
அவை
- சினோபார்ம் (Sinopharm)
- ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech)
- ஸ்புட்னிக் V (Sputnik V)
- ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா (Oxford-AstraZeneca)
சமீபத்திய உள்ளூர், பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்களின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருத்தி மேம்படுத்துவதற்கான ஒரு வழக்கமான செயல்முறையின் ஒரு பகுதியாக புதுப்பிக்கப்பட்ட பயண நெறிமுறைகளை நெருக்கடி மற்றும் பேரிடர் நிர்வாகத்தின் உச்சக் குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட பயண நடைமுறைகள் குறித்து நமது வலைதளத்தில் ஏற்கெனவே பதிவிட்டிருந்தோம்.
பயண நடைமுறைகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து துபாயின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஜூன் 23 முதல் இந்தியாவில் இருந்து துபாய்க்கு விமான சேவையை மீண்டும் இயக்குவதாக தற்பொழுது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.