ADVERTISEMENT

UAE: எக்ஸ்போ 2020- துபாய்க்கான டிக்கெட் விலை அறிவிப்பு..!!

Published: 1 Jul 2021, 10:55 AM |
Updated: 1 Jul 2021, 10:57 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வருடம் உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ள உலகின் மிகப்பெரிய கண்காட்சி நிகழ்வான எக்ஸ்போ-2020 துபாய் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்படவிருக்கும் வேளையில் எக்ஸ்போவிற்கான டிக்கெட் விலை தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில் ஒருமுறை எக்ஸ்போவிற்குள் நுழைய 95 திர்ஹம் கட்டணம் என்றும் 6 மாதத்திற்கான பாஸைப் பெற 495 திர்ஹம் கட்டணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 18 வயதுக்குக் கீழுள்ள நபர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அனுமதி இலவசம் என கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் துணை வரும் நபர்களுக்கு டிக்கெட் விலையில் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல், எக்ஸ்போவிற்குள் பலமுறை செல்வதற்கான பாஸ் பெற 195 திர்ஹம் கட்டணம் என்று அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.