உலகிலேயே அதிகளவு பார்வையாளர்களை எதிர்கொள்ளும் நகரமான துபாயில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் என பல இருக்கின்றன.
அதில் மிகவும் முக்கியமான ஒரு இடம் பாம் ஜூமேரா (Palm Jumeirah) ஆகும். உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய தீவான பாம் ஜூமேராவின் சில சுவாரஸ்யத் தகவல்களையும் அரிய புகைப்படங்களையும் கீழே காணலாம்.
பாம் தீவுக்கான அகழி மற்றும் அடித்தளம் அமைக்கும் பணி முதன் முதலில் 2001 ம் ஆண்டு தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, தீவின் முதல் குடியிருப்பாளர்கள் உள்ளே நுழைந்தனர்.
துபாயில் பாம் தீவு திட்டத்தை உருவாக்க கப்பல் மற்றும் பார்க் (Barge) தனது பணியை மேற்கொள்ளும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். பாம் தீவின் வடிவத்தை துல்லியமாக சுட்டிக்காட்ட குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) சுமார் 676 கிலோமீட்டர் உயரத்தில் விண்வெளியில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாம் ஜுமேராவின் தனித்துவமான அமைப்பு 95 மில்லியன் கன மீட்டர் மணலைக் கொண்டுள்ளது.
பேரீச்சை மர வடிவத்தை ஒத்திருக்கும் இந்த தீவு நிலப்பரப்பை சீர்படுத்தி செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவாகும்.
2005 ம் ஆண்டு கட்டுமானப் பணிகளின் போது, ஹஜார் மலைகளிலிருந்து 7 மில்லியன் டன் பாறைகள் பெறப்பட்டு, தளத்தை நிர்மாணிக்க கொண்டு செல்லப்பட்டன.
2004 ஆம் ஆண்டளவில் அடிப்படை கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, மேலும் 2006 ஆம் ஆண்டில் தீவு கட்டுமானத்திற்காக திறக்கப்பட்டது.
துபாயில் இந்த செயற்கை தீவை உருவாக்கும் போது கம்பி அல்லது கான்கிரீட் பயன்படுத்தப்படவில்லை என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும்.
2007 ஆம் ஆண்டில் ஹெலிகாப்டர் மூலம் பாம் ஜுமேராவில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
நவம்பர் 21, 2008 அன்று துபாயில் அட்லாண்டிஸ், தி பாம் (Atlantis, The Palm) திறந்து வைக்கப்பட்டபோது நிகழ்த்தப்பட்ட வான வேடிக்கை. 1,539 அறைகளைக் கொண்ட 1.5 பில்லியன் டாலர் மெகா ரிசார்ட்டான இது துபாயின் பாம் ஜுமேரா தீவில் திறக்கப்பட்ட முதல் ரிசார்ட் ஆகும்.
பாம் ஜுமேரா 5 கி.மீ நீளம் கொண்டது மற்றும் அதன் பிறை போன்ற வடிவமானது சுமார் 10.5 மைல்கள் நீளமாகும். மொத்தத்தில், இது 560 ஹெக்டேர் நிலத்தை உள்ளடக்கியது, இது 3.1 மைல்களுக்கு சமமானதாகும்.
போக்குவரத்து நோக்கங்களுக்காக பாம் ஜுமேராவை துபாயின் கடற்கரையோடு இணைக்கும் ஒரு மோனோரெயில் (monorail) செயல்பட்டு வருகிறது. இது ஒரு நாளைக்கு 20,000 க்கும் மேற்பட்ட பயணிகளைக் கொண்டு செல்கிறது.
பாம் ஜுமேரா உலகெங்கிலும் உள்ள பிரபலங்களை ஈர்த்துள்ளது. ஆங்கில கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் பாம் ஜுமேராவில் ஒரு வில்லாவை வைத்திருக்கிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் பாம் ஜுமேராவில் 6 படுக்கையறைகள் கொண்ட மாளிகையை வைத்திருக்கிறார், மேலும் இது அவருக்கு மிகவும் பிடித்தமான தங்குமிடமாகும்
பாம் ஃபவுண்டைன் 22 அக்டோபர் 2020 அன்று பாயிண்ட் பாம் ஜுமேராவில் (pointe Palm Jumeirah) திறக்கப்பட்டது. 7,327 சதுர மீட்டர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஃபவுண்டைனிற்கான சாதனையை இது படைத்துள்ளது.
தி வ்யூ அட் தி பாம் (The view at The Palm), பாம் ஜுமேராவின் 360 டிகிரி காட்சியைக் காணக்கூடிய ஒரு கண்காணிப்பு தளம் (observation desk), ஏப்ரல் 7, 2021 அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.
தற்போது இந்த தீவானது 20 வருடங்களைக் கடந்தாலும் இன்றளவும் பலரையும் வியப்புக்குள்ளாக்கும் விதத்தில் துபாயின் ஒரு முக்கிய சின்னமாக விளங்குகிறது.














