ADVERTISEMENT

விமானத்தடை காலத்திலும் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இயக்கப்பட்ட விமானம்..!! 140 பேர் அமீரகம் வந்தடைந்தனர்..!!

Published: 6 Jul 2021, 3:27 AM |
Updated: 6 Jul 2021, 3:41 AM |
Posted By: admin

இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டிருக்கும் வேளையில், சுமார் 140 பயணிகளைக் கொண்ட சார்ட்டர் விமானம் ஒன்று இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு திங்கள்கிழமை வந்திறங்கியுள்ளது.

ADVERTISEMENT

கேரளாவில் உள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையத்தின் (CIAL) இயக்குனர் ஏ.சி.கே.நாயர் கூறுகையில், இரு நாடுகளுக்கிடையில் பயணிகளை கொண்டு செல்ல அனுமதிக்கும் “ஏர் பபுள் ஒப்பந்தம்” மூலம் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடமிருந்து “சிறப்பு ஒப்புதல்” பெற்ற பின்னர் விமானம் கொச்சினிலிருந்து புறப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இயக்கப்பட்ட இந்த விமான சேவையை உறுதிப்படுத்திய நாயர் மேலும் கூறுகையில், “கொச்சினில் இருந்து பயணித்த பயணிகள் அனைவரும் செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்ஸி விசாக்கள் வைத்திருந்த இந்திய வெளிநாட்டினர் ஆகும். அமீரகம் அங்கீகரித்துள்ள தடுப்பூசியின் இரண்டு டோஸினையும் போட்டுக்கொண்டவர்கள். அவர்கள் விமானம் புறப்படுவதற்கு முன்னர் 48 மணி நேரத்திற்குள் தங்கள் கொரோனாவிற்கான PCR சோதனைகளை மேற்கொண்டனர். அத்துடன் பயணிகள் அபுதாபிக்கு விமானத்தில் ஏறுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னர் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் கட்டாய ரேபிட் PCR சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்” என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இது ஒரு திட்டமிடப்பட்ட விமானம் அல்ல. ஆனால் எதிஹாட் விமானம் மூலம் இயக்கப்பட்ட ஒரு சார்ட்டர் விமானம் என்று நாயர் மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும் இந்த விமானம் திங்கள்கிழமை காலை 8.15 மணிக்கு கொச்சினில் இருந்து புறப்பட்டது என்றும் நாயர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு உள்வரும் பயணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதை தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) ஏப்ரல் 24 அன்று 10 நாட்களுக்கு நீட்டிப்பதாக முதலில் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, மே 5 ம் தேதி இந்தியாவில் இருந்து பயணிகள் நுழைவதற்கான இடைநீக்கம் மறு அறிவிப்பு வரும் வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தது.

UAE: வெளிநாட்டிலிருந்து தடுப்பூசி போடாத குடியிருப்பாளர்களும் அமீரகம் வரலாம்..!! பயண நடைமுறையை புதுப்பித்த அபுதாபி..!!

சமீபத்தில் துபாய் மற்றும் அபுதாபி புதிய பயண நடைமுறைகளை அறிவித்திருந்த போதிலும் இன்று வரை இந்தியாவில் இருந்து விமான சேவைகள் எப்போது இயக்கப்படும் என தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.