ADVERTISEMENT

UAE: ரெசிடென்ஸ் விதிமீறல்களுக்கு விலக்கு அளிப்பதாக சமூக ஊடகத்தில் பரவும் செய்தி..!! விளக்கமளித்த ICA..!!

Published: 8 Jul 2021, 12:25 AM |
Updated: 8 Jul 2021, 6:18 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் ரெசிடென்ஸ் சட்டங்களை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் விலக்குகள் குறித்து சமூக ஊடகத்தில் பரவி வரும் அறிக்கையை மறுத்துள்ளது.

ADVERTISEMENT

சமூக ஊடக அறிக்கையில் விதிமீறல் புரிந்தோருக்கு விலக்கு அளிக்கப்படும் எனக் கூறி அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடு, இதற்கு முன்னர் வழங்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

ட்விட்டரில் இது குறித்து வெளியிட்ட செய்தியில், போலி அறிக்கையை வெளியிடுவதையோ அல்லது பரப்புவதையோ தவிர்க்குமாறு ஆணையம் குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் பொதுமக்கள் நாட்டின் குடியிருப்பு சட்டங்களைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் ஆணையம் வலியறுத்தியுள்ளது.

 

ADVERTISEMENT