ADVERTISEMENT

ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு மூன்று நாட்கள் இலவச பார்க்கிங்கை அறிவித்த ஷார்ஜா..!!

Published: 14 Jul 2021, 1:34 AM |
Updated: 14 Jul 2021, 5:28 AM |
Posted By: admin

ஷார்ஜாவில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு இலவச பார்க்கிங் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, ஈத் துவங்கும் முதல் மூன்று நாட்களில் பார்க்கிங் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் வாகன ஓட்டிகள் ஜூலை 20 முதல் 22 வரை வாகனங்களை இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என்று ஷார்ஜா முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது அரஃபா தினமான ஜூலை 19 பொருந்தாது என்றும், அன்று வழக்கம் போல் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதே போல் இந்த முடிவு ஏழு நாள் கட்டண வாகன நிறுத்துமிடங்களுக்கும் பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நீல நிற பார்க்கிங் குறியீடு மூலம் அடையாளம் காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT