ADVERTISEMENT

இந்தியாவில் இருந்து அமீரகம் பயணிக்க ஜூலை 31 வரை தடை நீட்டிப்பு..!! எதிஹாட் ஏர்வேஸ் தகவல்..!!

Published: 17 Jul 2021, 12:53 AM |
Updated: 17 Jul 2021, 2:32 AM |
Posted By: admin

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வருவதற்கான பயணத்தடையை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக அபுதாபியை மையமாக கொண்டு இயங்கும் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு எப்போது விமான சேவை துவங்கப்படும் என்ற வாடிக்கையாளரின் கேள்விக்கு பதிலளித்த எதிஹாட் ஏர்வேஸ் அமீரக அரசின் சமீபத்திய உத்தரவுகளுக்கு இணங்க விமான இடைநிறுத்தத்தை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட இந்த விமான நிறுவனம் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வருவதற்கான தடையை ஜூலை 21 வரை நீட்டிப்பதாக சமூக ஊடகங்களில் பயணிகளுக்கு அறிவித்திருந்தது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விமான சேவைகளை நிறுத்தி வைக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (GCAA) விமான பயணத்தடை எப்போது முடியும் என்பதற்கான இறுதி தேதியை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.