அபுதாபியில் உள்ள ரப்தன் (Rabdan) பகுதியில் புதிய கொரோனா டிரைவ்-த்ரூ சேவை மையத்தை திறந்துள்ளதாக அபுதாபி சுகாதார சேவைகள் நிறுவனம் (SEHA) அறிவித்துள்ளது.
இந்த புதிய மையத்தில் ஆறு டிராக்குகள் உள்ளன. அதில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்காகவும் நான்கு டிராக்குகள் ஸ்வாப் மற்றும் DPI லேசர் அடிப்படையிலான சோதனைகளுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இந்த மையமானது ஒருநாளைக்கு மொத்தம் 200 தடுப்பூசிகள் மற்றும் 1,000 ஸ்வாப் மற்றும் லேசர் சோதனைகள் மேற்கொள்ளும் திறன் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த மையம் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும், வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அண்மையில் அல் அய்னில் அல் சரூஜ் மற்றும் அபுதாபியில் அல் மன்ஹால் ஆகியவற்றில் திறக்கப்பட்ட மையங்களைப் போலவே ஷிப்பிங் கண்டெய்னர்களைப் பயன்படுத்தி இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மையத்தின் மூலம், SEHA ஆல் நிர்வகிக்கப்படும் கொரோனா டிரைவ்-த்ரூ சேவை மையங்களின் எண்ணிக்கை அபுதாபியில் ஏழாகவும் மற்றும் அமீரகத்தில் 22 ஆகவும் அதிகரித்துள்ளது.
தடுப்பூசியைப் பெற விரும்பும் அல்லது கொரோனா பரிசோதனை மேற்கொள்ள விரும்பும் நபர்கள் SEHA அப்ளிகேஷன் சென்று அப்பாய்மெண்ட்டை புக் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.