ADVERTISEMENT

UAE: ஈத் அல் அத்ஹா விடுமுறைக்கு ஒரே இடத்தில் கூடிய 13,000 வாகனங்கள்..!! எங்கு தெரியுமா..??

Published: 24 Jul 2021, 10:08 AM |
Updated: 24 Jul 2021, 10:12 AM |
Posted By: admin

விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கிறகாக வெளியில் செல்வது அனைவரும் விரும்பக்கூடியதே. அதுவும் நீண்ட நாட்கள் விடுமுறை என்றால் கேட்கவே தேவையில்லை. நெடுதூரம் செல்ல வேண்டிய இடத்திற்கெல்லாம் சென்று வருவோம்.

ADVERTISEMENT

அப்படி அமீரகத்தில் ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு விடுமுறை அளித்ததையொட்டி, ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர். அது என்ன இடம் தெரியுமா?? அமீரகத்தின் உயர்ந்த மலையான ராஸ் அல் கைமாவில் இருக்கக்கூடிய ஜெபெல் ஜெய்ஸ் மலைதான்.

அமீரகத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் விரும்பிப் போகும் இடம் அதுவே. சமீப காலமாக அவ்விடத்தில் சாகசங்கள் மேற்கொள்ளவும் அரசு முயற்சியினை மேற்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஈத் அல் அத்ஹாவின் முதல் இரண்டு நாட்களில் 13,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ராஸ் அல் கைமாவில் ஜெபல் ஜெய்ஸின் உச்சி வரை சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஸ் அல் கைமாவில் உள்ள பொது சேவைகள் துறையானது ஈத் முதல் நாளில் 5,500 வாகனங்களை பதிவு செய்துள்ளதாகவும், இது இரண்டாவது நாளில் 7,500 வாகனங்களாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொது சேவைத் துறையின் இயக்குநர் பொறியாளர் அகமது அல் ஹம்மடி, ஜெபல் ஜெய்ஸ் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மலை ஆர்வலர்களை ஈர்க்கிறது என்று கூறியுள்ளார்.

ஈத் அல் அத்ஹாவின் முதல் மற்றும் இரண்டாவது நாட்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 35,000 முதல் 40,000 பேர் வரை இருக்கும் என்று அவர் மதிப்பிட்டுள்ளார். இது ஒவ்வொரு வாகனத்திலும் சுமார் 3 முதல் 4 பயணிகள் இருக்கலாம் என்பதைக் கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஜெபல் ஜெய்ஸ் மலை உச்சிக்கு செல்லும் ஜெபெல் ஜெய்ஸ் சாலையில் காவல்துறை ரோந்து வாகனங்கள் பணியில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.