ADVERTISEMENT

UAE: இலவச பார்க்கிங்கை அறிவித்த எமிரேட்டுகள்..!! மெட்ரோ, டிராம், பேருந்து செயல்படும் நேரங்கள் அறிவிப்பு..!!

Published: 11 Aug 2021, 2:03 PM |
Updated: 11 Aug 2021, 3:29 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாமிய புத்தாண்டு விடுமுறையானது வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது விடுமுறையின் போது வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என சில எமிரேட் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்பதால் குடியிருப்பாளர்கள் இரண்டு நாட்கள் இலவச பார்க்கிங்கை அனுபவிக்கலாம்.

துபாய்

துபாய் குடியிருப்பாளர்கள் இரண்டு நாட்கள் இலவச வாகன பார்க்கிங்கை அனுபவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14 சனிக்கிழமை அன்று மீண்டும் பார்க்கிங் கட்டணம் செயல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும் இது மல்டி லெவல் டெர்மினல் பார்க்கிங்கிற்கு பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது

துபாய் மெட்ரோ, டிராம் செயல்படும் நேரங்கள்

ADVERTISEMENT

ஆகஸ்ட் 12 வியாழக்கிழமை, துபாய் மெட்ரோ ரெட் மற்றும் கிரீன் லைன் காலை 5 மணி முதல் மறுநாள் நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படும்.

துபாய் டிராம் காலை 6 மணி முதல் மறுநாள் இரவு 1 மணி வரை சேவையில் இருக்கும்.

பொது பேருந்துகள்

கோல்ட் சூக் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில், பேருந்துகள் அதிகாலை 4.50 முதல் நள்ளிரவு 12.30 வரை இயக்கப்படும்

அல் குபைபா நிலையம் அதிகாலை 4.15 முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை சேவையில் இருக்கும்

சத்வா உள்ளிட்ட துணை நிலையங்கள் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும். ரூட் C01 24 மணி நேரமும் செயல்படும்.

அல் குசைஸ் நிலையம் அதிகாலை 4.50 முதல் நள்ளிரவு 12.04 வரை சேவையில் இருக்கும்

அல் கூஸ் தொழில்துறை நிலையம் காலை 5.05 முதல் இரவு 11.30 வரை மற்றும் ஜெபெல் அலி நிலையம் அதிகாலை 4.58 முதல் நள்ளிரவு 12.15 வரை இயங்கும்

நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள்

அல் குபைபா போன்ற துணை நிலையங்கள் காலை 6.40 முதல் இரவு 10.20 வரை செயல்படும்.

யூனியன் ஸ்கொயர் அதிகாலை 4.25 முதல் நள்ளிரவு 12.15 வரை திறந்திருக்கும். எடிசலாட் மெட்ரோ நிலையம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, அபு ஹெயில் காலை 6.20 முதல் இரவு 10.40 வரை, மற்றும் ஹத்தா நிலையம் காலை 5.30 முதல் இரவு 9.30 வரை செயல்படும்

ஷார்ஜாவில் உள்ள அல் ஜுபைல் நிலையம் காலை 5.30 மணி முதல் இரவு 11.15 வரை செயல்படும்; மற்றும் அஜ்மான் நிலையம் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும்.

அபுதாபி

அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) ஆகஸ்ட் 12 வியாழக்கிழமை ஹிஜ்ரி புத்தாண்டு (1443) விடுமுறையின் போது பொதுப் பார்க்கிங் இடங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இலவச பொது பார்க்கிங் ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14 ஆம் தேதி காலை 7:59 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, முசாஃபா தொழில்துறைப் பகுதியில் உள்ள M18 வாகன பார்க்கிங் இலவசமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டாம் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை ஓட்ட வேண்டாம் என்று ITC பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன் இரவு 9:00 மணி முதல் காலை 8:00 மணி வரை குடியிருப்பு அனுமதி (resident parking) பார்க்கிங் தொடர்பான விதிமுறைகளை கடைபிடிக்குமாறு ITC பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

டார்ப் டோல் கேட் கட்டணம்

ஆகஸ்ட் 12 ம் தேதி ஹிஜ்ரி புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு டார்ப் டோல் கேட் அமைப்பு இலவசமாக இருக்கும் என்று ITC அறிவித்துள்ளது. மீண்டும் ஆகஸ்ட் 14 சனிக்கிழமை முதல் டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் பொதுப் பேருந்துகள் மற்றும் ஃபெர்ரி சேவைகள் விடுமுறை நாட்களில் பின்பற்றப்படுவது போலவே இயக்கப்படும். பேருந்துகள் அல்லது படகுகளைப் பயன்படுத்தும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கூடுதலாக, வாடிக்கையாளர்கள் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த சேவை ஆதரவு மையத்தை 800850 என்ற எண் அல்லது டாக்ஸி கால் சென்டர் 600535353 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஷார்ஜா

ஹிஜ்ரி புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஷார்ஜா முனிசிபாலிட்டியானது இலவச வாகன பார்க்கிங்கை அறிவித்துள்ளது.

இருப்பினும் இது ஏழு நாள் கட்டண பார்க்கிங் பகுதிக்கு பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.