ADVERTISEMENT

தமிழகத்தைச் சேர்ந்த பெண் மருத்துவருக்கு ‘10 ஆண்டு கோல்டன் விசா’ வழங்கிய அமீரகம்..!!

Published: 13 Aug 2021, 12:52 PM |
Updated: 13 Aug 2021, 1:32 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக அரசானது அமீரகத்தில் உள்ள முதலீட்டாளர்கள், மருத்துவர்கள் என குறிப்பிட்ட பிரிவில் இருக்கும் வெளிநாட்டவருக்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை வழங்கி வருகிறது.

ADVERTISEMENT

இதன் மூலம் பல வெளிநாட்டவர்கள் இந்த கோல்டன் விசாவினை பெற்றுள்ளனர். அதில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அமீரகத்தின் கோல்டன் விசாவினை பெற்றுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த நஸ்ரின் பேகம் என்ற பெண் மருத்துவருக்கு இந்த விசா கிடைத்துள்ளது. திருச்சியில் உள்ள சங்கரா ஆயுர்வேதிக் கல்லூரியில் படித்த இவர் கடந்த 2013 ம் ஆண்டில் அமீரகம் வந்துள்ளார்.

ADVERTISEMENT

2017 ம் ஆண்டில் மருத்துவ உரிமம் பெற்ற இவர் அதிலிருந்து மூன்று வருடங்களுக்கு மேலாக அமீரகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது அமீரக அரசு நஸ்ரினுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகளுக்கான அமீரக கோல்டன் விசா பெற்ற தமிழகத்தை சேர்ந்த பெண் மருத்துவர் நஸ்ரின் பேகத்திற்கு கலீஜ் தமிழ் குழுமம் சார்பாக வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

ADVERTISEMENT