ADVERTISEMENT

UAE: ஆகஸ்ட் 15 முதல் வெளிநாட்டினர் விசிட் விசாவில் வர அனுமதி..!! நிபந்தனைகளை வெளியிட்ட அபுதாபி மேலாண்மை குழு..!!

Published: 14 Aug 2021, 4:33 PM |
Updated: 15 Aug 2021, 5:10 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் விதிக்கப்பட்டிருந்த பயண தடை நீக்கப்பட்டதற்கு பிறகு அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அமீரகம் மீண்டும் திரும்பலாம் என அறிவிக்கப்பட்டு, ICA விடம் அனுமதி பெற்ற குடியிருப்பாளர்கள் அபுதாபிக்கு வர தொடங்கியுள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று ஆகஸ்ட் 14 ம் தேதி அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவு குழு வெளியிட்டிருக்கும் வெளிநாட்டிலிருந்து அபுதாபிக்கு வரும் பயணிகளுக்கான நடைமுறையில் வெளிநாடுகளை சேர்ந்த விசிட்டர்களும் அபுதாபிக்கு வரலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவு குழு அறிவித்த இந்த புதிய பயண நடைமுறைகள் நாளை (ஆகஸ்ட் 15) ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதன்படி, பசுமை பட்டியலில் உள்ள நாடுகள் மற்றும் பசுமை பட்டியலில் அல்லாத நாடுகளிலிருந்து தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடப்படாத விசிட்டர்கள் அல்லது சுற்றுலாவாசிகள் இப்போது அபுதாபிக்கு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
தடுப்பூசி போடப்பட்ட பயணிகள்..

புதிய நடைமுறையின்படி, பசுமைப் பட்டியல் (green countries) என குறிப்பிடப்பட்டிருக்கும் நாடுகளில் இருந்து அபுதாபிக்கு வரும் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை என்றும் அவர்கள் வருகையின் போது ஒரு PCR சோதனையும் மற்றும் 6 வது நாளில் மற்றுமொரு PCR சோதனையும் எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பசுமை பட்டியலில் அல்லாத இந்தியா போன்ற மற்ற நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், ​​வருகையின் போது PCR சோதனை, ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தல் மற்றும் 6 வது நாளில் ஒரு PCR சோதனை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த நெறிமுறை அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமீரக குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் விசிட்டர்கள் என அனைவருக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடப்படாத பயணிகள்..

பசுமைப் பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து அபுதாபிக்கு வரும் தடுப்பூசி போடப்படாத குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் விசிட்டர்கள் தனிமைப்படுத்தலின்றி வருகையின் போது PCR சோதனையும் அத்துடன் 6 மற்றும் 9 நாட்களில் PCR சோதனையும் எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பசுமை பட்டியலில் அல்லாத மற்ற நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி போடாத குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் விசிட்டர்கள், ​​வருகையின் போது PCR சோதனை, 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் மற்றும் 9 வது நாளில் மற்றொரு PCR சோதனை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UAE: விசிட்டில் வரும் வெளிநாட்டினர் வருகைக்கு முன் செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன..??