ADVERTISEMENT

UAE: கொரோனா சோதனை, விதிமுறைகள் குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய இலவச அழைப்பு மையம்..!! 24×7 என முழுநேரமும் இயங்கும் என தகவல்..!!

Published: 16 Aug 2021, 11:02 AM |
Updated: 17 Aug 2021, 3:59 AM |
Posted By: admin

அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு 24/7 என முழுநேரமும் இயங்கும் ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு சேனல் மூலம் அபுதாபியில் தொற்றுநோய் தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்குகிறது. இந்த சேவையானது இஸ்திஜாபா அவசர அழைப்பு மையத்தின் (Istijaba emergency call centre) நோக்கத்தை விரிவுபடுத்த ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த அழைப்பு மையத்தை கட்டணமில்லா எண்ணான 800 1717 (அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே இருந்து அழைக்கும் போது +971 800 1717) என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

கொரோனா சோதனைகள் மற்றும் தடுப்பூசிகள், தனிமைப்படுத்தல், தனிமைப்படுத்தல் செயல்முறை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் இதில் பதில் கிடைக்கும்.

ADVERTISEMENT

இது அபுதாபியில் நுழைவதற்கான நடைமுறைகள், பொது இடங்களுக்கு பாதுகாப்பான நுழைவு மற்றும் அமீரகத்தில் உள்ள அனைத்து பயனர்களுக்கான அல்ஹோஸ்ன் செயலி தொடர்பான அனைத்து கேள்விகளையும் தெளிவுபடுத்துவதோடு, மனநல ஆதரவையும் வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, அபுதாபியில் உள்ள சுகாதாரத் துறை (DoH), இஸ்திஜாபா இ-சிஸ்டத்தின் மூலம் அபுதாபியில் உள்ள சுகாதாரப் பாதுகாப்பு மையங்களை ஒருங்கிணைத்து தரவுகளை மிகவும் திறமையாகப் பரிமாறிக்கொள்ள முடியும் என்று அறிவித்தது.

ADVERTISEMENT

இந்த அமைப்பு சுகாதார மையங்களின் படுக்கைகளின் ஆக்கிரமிப்பு விகிதங்கள் மற்றும் பணியில் உள்ள மருத்துவ நிபுணர் உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு குறித்த அறிக்கைகளை உடனுக்குடன் வழங்குகிறது. இது அவசரகால தேவைக்கு பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.