ADVERTISEMENT

ஓமான்: வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இனி இந்த கவர்னரேட்டில் இலவச தடுப்பூசி கிடையாது..!! சுகாதார அமைச்சகம் தகவல்..!!

Published: 18 Aug 2021, 1:46 AM |
Updated: 18 Aug 2021, 5:16 AM |
Posted By: admin

ஓமானில் கொரோனாவிற்கான தடுப்பூசித் திட்டத்தின் மூலம் வெளிநாட்டுக் குடியிருப்பாளர்களுக்கு கடந்த ஒரு சில நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், அல் புரைமி கவர்னரேட்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் இலவச தடுப்பூசி செயல்முறையானது முடிவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) அறிவித்தது.

“வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இலவச தடுப்பூசி முடிந்துவிட்டது, இனி வரும் நாட்களில் அவர்களுக்கு இலவச தடுப்பூசிகள் வழங்கப்படாது என்பதை நாங்கள் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கினோம்” என்று அல் புரைமி கவர்னரேட்டில் உள்ள சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT