ADVERTISEMENT

சுற்றுலா விசாவில் அமீரகம் வர அனுமதிக்கப்படும் தடுப்பூசிகளின் பட்டியல் விபரம்..!!

Published: 29 Aug 2021, 10:22 AM |
Updated: 29 Aug 2021, 10:34 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக அரசானது நாளை ஆகஸ்ட் 30 முதல் அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா விசா வழங்குவதை மீண்டும் தொடங்குவதாக ICA மற்றும் NCEMA அதிகாரிகள் நேற்றைய தினம் அறிவித்திருந்தனர்.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பின் மூலம் அமீரகம் நுழைவதற்கான அளவுகோல்களில் ஒன்றாக, வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகாரம் பெற்ற கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸும் முழுமையாக போட்டிருக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.

மேலும் ஐக்கிய அரபுஅமீரகத்தில் தடுப்பூசி போடப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான சலுகைகளை சுற்றுலா விசாவில் வருபவர்களும் அனுபவிப்பதற்காக ICA வலைத்தளம் அல்லது அல்ஹோஸ்ன் செயலியில் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை பதிவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

அதன்படி, உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகளின் தகவல்களை இங்கே காணலாம்.

>> மாடர்னா

ADVERTISEMENT

தடுப்பூசி வகை: mRNA

அங்கீகரித்த நாடுகள்: 69 நாடுகள்

சோதனை விபரம்: 6 நாடுகளில் 25 சோதனைகள்

>> பைசர்-பயோஎன்டெக்

தடுப்பூசி வகை: mRNA

அங்கீகரித்த நாடுகள்: 98 நாடுகள்

சோதனை விபரம்: 17 நாடுகளில் 30 சோதனைகள்

>> ஜான்சன் (ஜான்சன் & ஜான்சன்)

தடுப்பூசி வகை: நகலெடுக்காத வைரஸ் வெக்டார் (Non-replicating viral vector)

அங்கீகரித்த நாடுகள்: 59 நாடுகள்

சோதனை விபரம்: 17 நாடுகளில் 11 சோதனைகள்

>> ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராஜெனெகா

தடுப்பூசி வகை: நகலெடுக்காத வைரஸ் வெக்டார் (Non-replicating viral vector)

அங்கீகரித்த நாடுகள்: 121 நாடுகள்

சோதனை விபரம்: 20 நாடுகளில் 40 சோதனைகள்

>> கோவிஷீல்ட் (ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராஜெனெகா உருவாக்கம்)

தடுப்பூசி வகை: நகலெடுக்காத வைரஸ் வெக்டார் (Non-replicating viral vector)

அங்கீகரித்த நாடுகள்: 45 நாடுகள்

சோதனை விபரம்: 7 நாடுகளில் 19 சோதனைகள்

>> சினோஃபார்ம்

தடுப்பூசி வகை: செயலிழந்த வைரஸ் (Inactivated)

அங்கீகரித்த நாடுகள்: 60 நாடுகள்

சோதனை விபரம்: 7 நாடுகளில் 9 சோதனைகள்

>> சினோவாக்

தடுப்பூசி வகை: செயலிழந்த வைரஸ் (Inactivated)

அங்கீகரித்த நாடுகள்: 39 நாடுகள்

சோதனை விபரம்: 7 நாடுகளில் 19 சோதனைகள்