ADVERTISEMENT

PCR சோதனைக் கட்டணத்தை 50 திர்ஹம்ஸாக அதிரடியாக குறைத்த அமீரக அரசு..!!

Published: 30 Aug 2021, 2:08 PM |
Updated: 30 Aug 2021, 2:19 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கொரோனாவிற்கான PCR சோதனைகளின் விலை 50 திர்ஹமாக குறைக்கப்பட்டுள்ளது என அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையான கட்டணம் அனைத்து மருத்துவ மையங்களுக்கும் பொருந்தும் என்று குழு அறிவித்துள்ளது.

அதே போல் சோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் சோதனை மேற்கொண்ட நபருக்கு பகிரப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த புதிய நடைமுறை ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று ஆணையம் கூறியுள்ளது.