ADVERTISEMENT

UAE கொரோனா அப்டேட் (செப்டம்பர் 1): பாதிக்கப்பட்டோர் 985 பேர்..!! 2 நபர் உயிரிழப்பு..!!

Published: 1 Sep 2021, 12:00 PM |
Updated: 1 Sep 2021, 12:00 PM |
Posted By: admin

அமீரகத்தில் இன்று (புதன்கிழமை, செப்டம்பர் 1, 2021) புதிதாக 985 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 719,355 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 2  நபர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,043 அதிகரித்துள்ளது.

இன்றைய நாளில் மட்டும் 1,526 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 706,644 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT