ADVERTISEMENT

சினோஃபார்ம் தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் கட்டாயம்..!! வலியுறுத்தும் அபுதாபி..!!

Published: 2 Sep 2021, 1:50 PM |
Updated: 2 Sep 2021, 1:56 PM |
Posted By: admin

சினோஃபார்ம் கொரோனா தடுப்பூசியை ஆறு மாதங்களுக்கு முன்பு முழுமையாகப் பெற்று அபுதாபியில் வசித்து வரும் மக்கள் செப்டம்பர் 20 ம் தேதிக்குள் பூஸ்டர் டோஸ் போட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் இந்த தடுப்பூசியின் இரண்டாவது டோஸினைப் போட்டுக்கொண்டு ஆறு மாதங்களைக் கடந்தவர்கள் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என அபுதாபியின் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவு குழு அறிவித்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பூஸ்டர் தடுப்பூசி அவசியம் என்றும் மற்றும் பூஸ்டர் தடுப்பூசியினைப் போட்டுக்கொள்ள ஆகஸ்ட் 20 ம் தேதியில் இருந்து 30 நாள் சலுகை காலம் உள்ளது என்றும் குழு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

செப்டம்பர் 20 முதல், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ கொரோனாவிற்கான பிரத்யேக அப்ளிகேஷனான அல் ஹோஸ்னில் (Al Hosn) கிரீன் ஸ்டேடஸ் ரத்து செய்யப்படும் என்றும் இதனால் அபுதாபியின் பொது இடங்களில் நுழைய முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. அபுதாபியின் பெரும்பாலான பொது இடங்களுக்குள் நுழைய அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் ஸ்டேடஸ் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

மூன்றாவது டோஸுக்குப் பிறகு, அல் ஹோசனில் இந்த நிலையை பராமரிக்க குறைந்தது 30 நாட்களுக்கு ஒரு முறை PCR சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ADVERTISEMENT

அதே நேரத்தில், ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி அல்லது அமீரக அரசு அங்கீகரித்துள்ள வேறு எந்த தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்ட குடியிருப்பாளர்களுக்கு இந்த கட்டத்தில் மூன்றாவது டோஸ் தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பூஸ்டர் தடுப்பூசியினைப் பெற அமீரகத்தின் எந்தவொரு சேஹா (SEHA) தடுப்பூசி மையத்திலும் முன் நியமனம் இல்லாமல் போட்டுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.