ADVERTISEMENT

தொடர்ந்து குறைவான நோய் தொற்றுக்களை பதிவு செய்து வரும் அமீரகம்.. !! கடந்த ஒரு நாளில் கொரோனாவிற்கு யாரும் பலியாகவல்லை..!!

Published: 2 Sep 2021, 1:26 PM |
Updated: 2 Sep 2021, 1:29 PM |
Posted By: admin

அமீரகத்தில் இன்று (வியாழக்கிழமை, செப்டம்பர் 2, 2021) புதிதாக 975 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 720,330 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு யாரும் பலியாகவில்லை. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 2,043 ஆக உள்ளது.

இன்றைய நாளில் மட்டும் 1,511 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 708,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT