ADVERTISEMENT

பிக் டிக்கெட்டில் 12 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகை வென்ற இந்தியர்..!!

Published: 4 Sep 2021, 1:50 PM |
Updated: 4 Sep 2021, 1:51 PM |
Posted By: admin

ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வரும் அபுதாபி பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவானது இந்த மாதம் செப்டம்பர் 3 ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை நடந்த இந்த பிக் டிக்கெட் குலுக்கலில் இந்தியாவைச் சேர்ந்த அபுதாஹிர் வென்று முதல் பரிசான 12 மில்லியன் திர்ஹம் பரிசுத் தொகையை வென்றுள்ளார்.

அவரைத் தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்த நைனா முகமது ரஃபிக் இரண்டாவது பரிசான 1 மில்லியன் திர்ஹம் ரொக்கப் பரிசை வென்றுள்ளார்.

ADVERTISEMENT

அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த பிக் டிக்கெட்டானது கடந்த 1992 ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்டை www.bigticket.ae என்ற இணையதளத்தில் சென்று வாங்கிக் கொள்ளலாம்.

அடுத்த மாதம் நடைபெறும் பிக் டிக்கெட் ரேஃபிளில் முதலில் வரும் நபருக்கு 10 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT