ADVERTISEMENT

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தில் 50% தள்ளுபடி வழங்கிய எமிரேட்..!! 5 நாட்கள் மட்டுமே..!!

Published: 4 Sep 2021, 4:47 PM |
Updated: 5 Sep 2021, 4:54 AM |
Posted By: admin

ஆகஸ்ட் 1 -க்கு முன் வாகன ஓட்டிகள் புரிந்த போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தில் 50 சதவீத தள்ளுபடியை உம் அல் குவைன் காவல்துறை தற்பொழுது அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த தள்ளுபடியானது செப்டம்பர் 5 முதல் 9 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் ஐக்கிய அரபு அமீரக பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்த முயற்சி தொடங்கப்பட்டதாக உயர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இருப்பினும், இந்த தள்ளுபடி ஆர்டிகிள் (1) (a, b) (பிற உயிர்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல்), ஆர்டிகிள் (73) (வாகனத்தின் என்ஜீனை மாற்றுவது அல்லது லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டி பிடிபட்டவர்கள்) மற்றும் ஆர்டிகிள் (3) (அட்டர்னி ஜெனரலின் முடிவு எண் (38) ன் படி வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான மீறல், இது கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த தீர்மானம் எண் 54 ஐ திருத்தம் செய்து அமைக்கப்பட்டது) போன்ற விதிமீறல் புரிந்தவர்களுக்கு பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.