ADVERTISEMENT

UAE: ஒரு வருடத்திற்குப் பிறகு இயங்கும் அஜ்மான்-அபுதாபி இன்டர்சிட்டி பேருந்து சேவை..!!

Published: 6 Sep 2021, 9:18 AM |
Updated: 6 Sep 2021, 9:25 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த அஜ்மான், அபுதாபி இடையிலான இன்டர்சிட்டி பேருந்து சேவைகள் தற்பொழுது மீண்டும் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அஜ்மானில் இருந்து அபுதாபி செல்லும் பொதுப் பேருந்துகள் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நிறுத்தப்பட்ட நிலையில் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.

அஜ்மான் பொது போக்குவரத்து ஆணையம் (APTA) அஜ்மானில் இருந்து அபுதாபிக்கு தினமும் மொத்தம் நான்கு பயணங்களை இயக்கும் என கூறியுள்ளது. அஜ்மானில் இருந்து அபுதாபிக்கு இரண்டு மற்றும் மீண்டும் அஜ்மான் திரும்புவதற்கு இரண்டு பயணங்கள் என மொத்தமாக நான்கு பயணங்கள் என்று பொதுப் போக்குவரத்து இயக்குநர் பொறியாளர் சாமி அலி அல் ஜல்லாஃப் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அஜ்மானில் உள்ள அல் முசல்லா நிலையத்திலிருந்து துவங்கும் இந்தப் பயணம் அபுதாபி பேருந்து நிலையத்தை அடையும். பின்னர் மீண்டும் அல் முசல்லா நிலையத்திற்கு அங்கிருந்து பேருந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், முதல் பேருந்து அஜ்மானில் காலை 7 மணிக்கும், கடைசியாக மாலை 6 மணிக்கும் புறப்படும். அபுதாபியில் இருந்து காலை 10 மணிக்கும் இரவு 9 மணிக்கும் புறப்படும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஒரு டிக்கெட்டுக்கு 35 திர்ஹம் கட்டணம் என்றும், ஆனால் மசார் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு 30 திர்ஹம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு ஏற்ப பேருந்து சேவை மீண்டும் தொடங்குகிறது என்று APTA தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.