ADVERTISEMENT

UAE: வேலை இழந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற சலுகை காலம் நீட்டிப்பு..!! 6 மாதங்கள் வரை தங்க அனுமதி..!! விரைவில் வரும் புதிய சட்டம்..!!

Published: 6 Sep 2021, 10:11 AM |
Updated: 19 Jan 2022, 10:42 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சியை மேலும் உயர்த்தும் விதமாக அடுத்த 50 ஆண்டுகளுக்கான கொள்கைகளை செப்டம்பர் 5 ம் தேதி அமீரக தலைவர்கள் வெளியிட்டனர். இந்த ஆவணங்களின் அடிப்படையில் கிரீன் விசா, ஃப்ரீலேன்சர் விசா போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அமீரகத்தில் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அவை குறித்த விரிவான விளக்கங்களையும் நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். 

ADVERTISEMENT

அமீரகத்தில் அறிவிக்கப்பட்ட புதிய விசாக்கள்..!! 15 வயதிற்கு மேற்பட்டோரும் வேலை செய்ய அனுமதி..!!

UAE: அடுத்த 50 ஆண்டுகளுக்கான கோட்பாடுகளை அறிவித்த அமீரக தலைவர்கள்..!! குடிமக்கள், குடியிருப்பாளர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதே எங்கள் ஒரே பணி..!!

ADVERTISEMENT

அதில் ஒரு பகுதியாக அமீரகத்தில் இனி வேலையை இழந்த வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலையை இழந்த ஊழியர்கள் இனி அமீரகத்தில் ஆறு மாதங்கள் வரை கூடுதலாக தங்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக சட்டத்தின்படி தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட அல்லது விசா கேன்சல் செய்யப்பட்ட ஊழியர்கள் 30 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். ஆனால் அதிகாரிகள் தற்பொழுது இந்த சட்டத்தைத் தளர்த்தி வேலையை இழந்த ஊழியர்கள் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தங்குவதற்கேற்ப விரைவில் அனுமதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

“பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு நாட்டை விட்டு வெளியேறும் சலுகைக் காலத்தை நாங்கள் தளர்த்துகிறோம். முந்தைய 30 நாட்களுக்குப் பதிலாக, வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற 90 முதல் 180 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்” என்று வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் ஜியுடி கூறியுள்ளார்.

மேலும் “இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை அளிக்கிறது. ஏனெனில் இது வேலையை இழந்த ஊழியர்கள் அமீரகத்தில் மற்றொரு வேலையைத் தேட அவர்களுக்கு போதுமான காலநேரத்தை வழங்கும். ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரை, இதன் மூலம் திறமையானவர்களை நாட்டிற்குள் தக்கவைக்க உதவும்” என்றும் தெரிவித்துள்ளார்.

 

Source: Khaleej Times