ADVERTISEMENT

UAE: ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே பகுதி நேர வேலை செய்ய முதலாளியின் ஒப்புதல் தேவையில்லை..!! சட்டம் சொல்வது என்ன..??

Published: 9 Sep 2021, 4:04 PM |
Updated: 9 Sep 2021, 4:04 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்களா..?? முழுநேர வேலை செய்து கொண்டே பகுதிநேர வேலை செய்ய விரும்புகிறீர்களா..?? அவ்வாறு செய்தால் அது உங்கள் தற்போதைய வேலையை பாதிக்கும் என்று கவலைப்படுகிறீர்களா..?? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்குதான்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டு மேலும் வேறொரு நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் தொழிலாளர்களுக்கு அவர்களின் தொழிலாளர் உரிமைகளை அறிய உதவுவதற்காக, பகுதிநேர ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MOHRE) வெளியிட்டுள்ளது.

“இந்த பகுதிநேர வேலை முறையின் விதிமுறைகள் மூலம், நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளியின் ஒப்புதல் இல்லாமல் அல்லது வேறு எந்த அனுமதியும் இல்லாமல், வாரத்திற்கு 20 மணி நேரத்திற்கு குறையாமல் பணிபுரிபவர்கள் பகுதிநேர வேலை செய்ய அமைச்சகத்தின் வேலை விதிமுறைகளின்படி கடமைகளை உறுதிசெய்தால், நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் வேலை செய்யலாம்” என தெரிவிக்கப்பட்டுளளது.

ADVERTISEMENT

பகுதி நேர வேலை ஒப்பந்தம் ஒரு நபரை அவர் பணிபுரியும் முதன்மையான நிறுவனத்தில் ஒரு வாரத்தில் பணியாற்றக்கூடிய வேலை நேரத்தை விட குறைவான மணிநேரம் வேலை செய்ய அனுமதிக்கிறது. எனினும் பகுதிநேர வேலைவாய்ப்பில் ஒரு வாரத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மணிநேரங்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் என சட்டப்பூர்வமாகக் கருதப்படுவதில்லை என அறியப்படுகிறது.

ADVERTISEMENT

அவ்வாறு பகுதிநேரமாக வேலை செய்ய விரும்பும் நபர்கள் சட்டப்பூர்வமாக வேலை செய்ய பிற தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதும் கவனிக்கத்தக்கது. அவை,

1. விண்ணப்பிக்கும் ஊழியரின் திறமை நிலை அமைச்சகத்தால் பட்டியலிடப்பட்டுள்ள 1, 2 அல்லது 3 என்ற நிலைகளின் கீழ் வர வேண்டும்.

2. அமைச்சகத்திடமிருந்து பகுதி நேர வேலை அனுமதி பெற வேண்டும்.

பகுதி நேர வேலைக்கு அனுமதி பெற விண்ணப்பதாரர் கையெழுத்திட்ட பகுதி நேர ஒப்பந்தத்தை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பகுதிநேர வேலை அனுமதிக்கான கட்டணமாக 100 திர்ஹம் விண்ணப்பக் கட்டணம் மற்றும் 500 திர்ஹம் ஒப்புதல் கட்டணம் செலுத்த வேண்டும். அத்துடன் விண்ணப்பிக்கும் ஊழியர் 18 வயதிற்கு மேல் இருந்தால், 6 மாதங்களுக்கு மேல் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை வைத்திருந்தால் மற்றும் செல்லுபடியாகும் அமீரக குடியிருப்பு விசா வைத்திருந்தால் அமீரகத்தில் பணிபுரியக்கூடிய எந்த வெளிநாட்டினரும் பகுதி நேர வேளைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.