ADVERTISEMENT

அமீரகத்தில் உள்ள ஒரு டயர் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..!! தீயை அணைக்கும் முயற்சியில் பாதுகாப்புக் குழுவினர்..!!

Published: 14 Sep 2021, 1:37 PM |
Updated: 14 Sep 2021, 1:39 PM |
Posted By: admin

அமீரகத்தின் உம் அல் குவைனில் அமைந்துள்ள  ஒரு டயர் தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உம் அல் குவைனில் உள்ள உம் அல் தவ்ப் தொழிற்துறை பகுதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சிவில் பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து தீயணைக்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT