சமூக வலைதளங்களில் பல பேருக்கு தெரியும் வண்ணம் புகழ் பெறுவதே இன்றைய கால மெரும்பாலான சமூகத்தின் முதல் முக்கிய கனவாக இருக்கின்றது. இதற்காக வேண்டி பல்வேறு தளங்களில் புதுப்புது வித்தியாசமான முயற்சியை மேற்கொள்கின்றனர். அதில் சில மக்களுக்கு மிகவும் பிடித்தும் விடுகிறது.
அந்த வரிசையில் துபாயில் வசிக்கும் சமூக ஊடக பயனாளி ஒருவர் தான் வெளியிட்ட வீடியோ ஒன்றால் வைரலாகி இருக்கிறார்.
அவர் வெளியிட்ட ஒரு பொழுதுபோக்கு வீடியோவில், அவர் துபாய் வழியாக ‘மேஜிக் கார்பெட்’ மீது சவாரி செய்து குடியிருப்பாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வேடிக்கை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
YouTube இல் RhyzOrDie என்ற பயனரின் வீடியோவில், அவர் அலாவுதீன் போல வேடமணிந்து அலாவுதீன் வைத்திருக்கும் கார்பெட் போன்றதொரு கார்பெட்டில் பொது இடங்களில் பயணித்துள்ளார்.
துபாயின் பர் துபாய் மற்றும் ஓல்ட் சூக்கின் சில பகுதிகளிலும் அவர் பயணம் மேற்கொள்வதை வீடியோ காட்டுகிறது. மேலும் துபாய் கடலுக்கு மேலும் தனது சாகசத்தை நிகழ்த்தியிருக்கிறார்.
வீடியோவுக்கான யூடியூப் விளக்கத்தில், இந்த யோசனை கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
அவர் செய்த இந்த வேடிக்கை நிகழ்வானது காண்போருக்கு கேளிக்கையாகவும் ஆச்சரியமாகவும் இருந்துள்ளது.