ADVERTISEMENT

UAE: காலாவதியான ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட வாகனங்கள் கேமராவில் கண்காணிப்பு..!! பிடிபடுபவர்களுக்கு அபராதம்..!!

Published: 8 Nov 2021, 12:06 PM |
Updated: 8 Nov 2021, 12:06 PM |
Posted By: admin

நவம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை முதல், காலாவதியான பதிவு கொண்ட வாகனங்கள் போக்குவரத்து கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று ராஸ் அல் கைமா காவல்துறை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ராஸ் அல் கைமா சாலைகளில் செயல்படுத்தப்படும் கேமராக்கள், காலாவதியான பதிவு கொண்ட வாகனங்கள் மட்டுமின்றி, காலாவதியான உரிமங்கள் மற்றும் கார் இன்சூரன்ஸையும் கண்காணிக்கும் என கூறப்பட்டுள்ளது.

கேமராவில் பிடிபடுபவர்களுக்கு 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் ஃபெடரல் போக்குவரத்து சட்டத்தின்படி நான்கு கரும் புள்ளிகள் (black points) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

போக்குவரத்து மற்றும் ரோந்து துறையின் இயக்குனர் பிரிகேடியர் அஹ்மத் அல்-சாம் அல்-நக்பி கூறுகையில், இந்த அமைப்பு ராஸ் அல் கைமாவின் பல்வேறு உள் மற்றும் வெளிப்புற சாலைகளில் செயல்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் விதிமீறல்கள் மற்றும் சட்ட நடைமுறைகளைத் தடுக்க காலாவதியான உரிமங்களை புதுப்பிப்பதை சாரதிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் துரிதப்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT

எலக்ட்ரானிக் சர்வீசஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் துறையின் துணை இயக்குநர், கர்னல் உமர் முகமது அல்-ஊத் அல்-துனைஜி, வாகனங்களை கண்காணிப்பதில் 95%க்கும் அதிகமான துல்லியத்துடனும் தரத்துடனும் கேமராக்கள் உள்ளன என்று அவர் விளக்கியுள்ளார்.