ADVERTISEMENT

அமீரகத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு..!! முதல் டிரைவ் த்ரூ சோதனை மையத்தை நிரந்தரமாக மூடிய SEHA..!!

Published: 11 Nov 2021, 2:12 PM |
Updated: 11 Nov 2021, 3:38 PM |
Posted By: admin

அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் (SEHA) சையத் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் உள்ள அதன் கொரோனா டிரைவ்-த்ரூ மையத்தை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கொரோனா தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து அமீரகத்திலேயே முதன் முதலாக அமைக்கப்பட்ட டிரைவ் த்ரூ சோதனை மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றானது மிகவும் குறைந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

இந்த மையம் மூடப்பட்டதையடுத்து கொரோனாவிற்கான PCR பரிசோதனைகள் அல்லது தடுப்பூசிகள் தேவைப்படும் குடியிருப்பாளர்கள் மற்ற டிரைவ்-த்ரூ மையங்களில் அப்பாய்மெண்ட்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அபுதாபியின் சுகாதாரத் துறை (DoH) சமீபத்தில் அபுதாபியில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் கொரோனா நோயாளி இல்லாத மருத்துவமனைகள் என்று அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

மேலும் இனி அபுதாபியில் உள்ள ரஹ்பா மருத்துவமனை, அல் அய்ன் சிட்டியில் உள்ள அல் அய்ன் மருத்துவமனை மற்றும் அபுதாபி முழுவதும் உள்ள பிற கள மருத்துவமனைகளில் (field hospital) மட்டுமே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றது.