அமீரகத்தில் தற்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கொரோனா தடுப்பூசி மையம் நாளை (வியாழக்கிழமை) முதல் மூடப்படும் என அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
துபாயில் இருக்கும் அல்பைத் மெத்வாஹித் அல் வர்கா (Albait Metwahid Al Warqa) கொரோனா தடுப்பூசி மையம் மார்ச் 17 முதல் மூடப்படும் என்று துபாய் சுகாதார ஆணையம் (DHA) ட்விட்டரில் அறிவித்துள்ளது. இந்த மையத்தில் ஏற்கனவே அப்பாயிண்ட்மெண்ட் வைத்திருக்கும் நபர்களுக்கு DHA வெளியிட்ட அறிவிப்பில், “உங்கள் தடுப்பூசி அப்பாய்மெண்ட்டிற்கான புதிய இடத்தின் விவரங்களுடன் நாங்கள் SMS அனுப்புவோம்.” என குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஜனவரியில், துபாயின் ஒன் சென்ட்ரல் கொரோனா தடுப்பூசி மையத்தை மூடுவதாக DHA அறிவித்தது. அதிகளவு மக்களுக்கு தடுப்பூசி முழுமையாக அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மார்ச் 16 ஆம் தேதி நிலவரப்படி, தகுதியுள்ள அனைத்து குடியிருப்பாளர்களில் 97 சதவிகிதம் பேருக்கு கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.