துபாய் முனிசிபாலிட்டியானது ரமலான் மாதத்தை முன்னிட்டு பொதுப் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் செயல்படுவதற்கான நேர மாற்றத்தை அறிவித்துள்ளது.
மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய நேரத்தின் மூலம் பொதுமக்கள் ரமலான் மாதத்தில் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் ஒன்றிணைந்து தங்களின் நேரத்தை அனுபவிக்க முடியும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய இயக்க நேரங்களுக்கான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய நேரங்கள்:
முஷ்ரிஃப் நேஷனல் பார்க் – மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை
அல் சஃபா பார்க் ஜபீல் பார்க் – மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை
அல் கோர் பார்க் – காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை
அல் மம்சார் பார்க் – காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை
ரெசிடென்ஷியல் பார்க் ஸ்கொயர் அண்ட் லேக் – காலை 8 முதல் நள்ளிரவு 1 மணி வரை
மவுண்டைன் டிராக் – காலை 6 மணி முதல் மாலை 5:30 மணி வரை
துபாய் ஃபிரேம் – காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை
குரானிக் பார்க் – காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை
கிளாஸ் ஹவுஸ் கேவ் ஆஃப் மிராகிள்ஸ் – காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை
சில்ட்ரென்ஸ் சிட்டி- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை (திங்கள் முதல் வெள்ளி வரை), காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை (சனி மற்றும் ஞாயிறு)
துபாய் சஃபாரி பார்க் – காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் 12 மணி வரை