இந்த வருடத்தின் புனித ரமலான் மாதம் தொடங்கிவிட்ட நிலையில் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) புனித ரமலான் மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பல சமூக முயற்சிகளில் ஒரு பகுதியாக தினமும் 1,000 இஃப்தார் உணவுகளை விநியோகித்தல்; ரேஷன் வாங்குவதற்கு முன்பணம் செலுத்திய நோல் கார்டுகள் இலவசமாக வழங்குதல்; மற்றும் தேவைப்படும் குடும்பங்களுக்கு இலவச ரொட்டிகளை வழங்குதல் போன்ற சேவைகளை RTA செய்து வருவதாக அறிவித்துள்ளது. .
RTA வால் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது பேருந்து ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், டெலிவரி பைக் மற்றும் டிரக் ஓட்டுநர்கள், கைவிடப்பட்டவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் போன்ற பரந்த அளவிலான சமூகப் பிரிவுகளுக்கு உதவுவதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளளது.
இந்த திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு சுமார் 1,000 இஃப்தார் உணவுகளை வழங்குவதன் அடிப்படையில் இந்த மாதம் முழுவதும் 30000 இஃப்தார் உணவுகளை வழங்க RTA திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சையத் மனிதநேய தினத்துடன் இணைந்து நடத்தப்படும் ‘ரமலான் ரேஷன்’ திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ப்ரீபெய்ட் நோல் கார்டுகளையும் RTA இலவசமாக அளித்து வருகிறது.
மேலும் துபாயின் ஆட்சியாளர் மாண்புமிகு முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் குளோபல் முன்முயற்சியின் திட்டமான ‘சபில் ரொட்டி’ என்ற திட்டத்தின் கீழ் துபாயின் 10 மாவட்டங்களில் ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் தேவைப்படும் குடும்பங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இலவச ரொட்டியையும் RTA வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.