ADVERTISEMENT

UAE: நோட்டீஸ் பீரியடில் இருந்த இந்தியருக்கு அடித்த 15 மில்லியன் திர்ஹம் ஜாக்பாட்..!! கடைசியில் கைகுடுத்த பிக் டிக்கெட்..!!

Published: 4 Apr 2022, 7:49 PM |
Updated: 4 Apr 2022, 7:57 PM |
Posted By: admin

அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிக் டிக்கெட் ராஃபிள் டிராவில் குவைத்தில் வசித்து வரும் இந்தியர் ஒருவர் 15 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

ADVERTISEMENT

கேரளாவைச் சேர்ந்த ரதீஷ் ரகுனந்தன் தன்னுடன் பணிபுரியும் 11 பேருடன் சேர்ந்து 291593 என்ற அதிர்ஷ்ட எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியுள்ளார். இவர்கள் குவைத்தில் ஒரு கொரியன் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனியில் பணிபுரிந்து வருவதாக ரதீஷ் தெரிவித்துள்ளார். இந்த 12 பேரும் நோட்டீஸ் பீரியடில் பணிபுரிந்து வருவதாகவும் ஏப்ரல் 30 க்குள் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் பணிபுரியும் நிறுவனம் குவைத்தில் அவர்களின் கடைசி திட்டம் இதுதான் என்று கூறியது. நாங்கள் திட்டத்தை முடித்துவிட்டோம், பெரும்பாலான ஊழியர்கள் வெளியேறிவிட்டனர். மீதமுள்ள 12 பேர் நாங்கள்தான்,” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ரதீஷ், தானும் தனது சகாக்களும் பல ஆண்டுகளாக பிக் டிக்கெட் எடுத்து வருவதாகக் கூறியுள்ளார். அவர் “நாங்கள் இந்த டிக்கெட்டை எடுத்தபோது, ​​இது எங்கள் கடைசி டிக்கெட்டாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். அடுத்த மாதம் நாங்கள் ஒன்றாக இருக்க மாட்டோம் என்று எங்களுக்குத் தெரியும். குறைந்தபட்சம் வாராந்திர டிராவில் வெற்றி பெறுவோம் என்று நம்பினோம். ஆனால் இந்த ஜாக்பாட் அடிப்போம் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை”.

“இது கடவுள் நமக்கு கொடுத்த வரம். நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் இங்கு வசித்து வருவதால் எங்கள் எதிர்காலம் குறித்து நாங்கள் அனைவரும் கவலைப்பட்டோம். எங்கள் குழந்தைகளின் கல்வி பற்றி நாங்கள் கவலைப்பட்டோம். அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தோம்” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இத்தகைய சூழ்நிலையில் பிக் டிக்கெட் வென்றிருப்பது தனக்கு மிக மகிழ்ச்சியாக இருப்பதாக ரதீஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.