ஐக்கிய அரபு அமீரகத்தில் தினசரி கொரோனா தொற்றுகளானது தொடர்ந்து குறைந்த வண்ணம் இருப்பதையொட்டி, உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா சிறப்பு வண்ண விளக்குகளுடனும் நம்பிக்கையின் செய்தியுடனும் வியாழக்கிழமை சிறப்பு காணொளியை பகிர்ந்துள்ளது.
இந்த காணொளியானது முன்னணி சுகாதார வீரர்கள் வைரஸை கட்டுப்படுத்த மேற்கொண்ட போராட்டம் அனைத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
மேலும் இந்த காணொளி வைரஸிலிருந்து நாடு எவ்வாறு ‘மீட்பு’ நிலையை அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதே சமயத்தில் குடியிருப்பாளர்கள் எவ்வாறு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் உறுதியாக இருந்தனர் என்பதையும் வலியுறுத்துகிறது எனவும் இதில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தொடர்பான ஒரு மரணத்தைக் கூட பதிவு செய்யவில்லை.
மேலும் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்றுகளானது 300 க்கும் கீழ் பதிவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.